மதுரை:
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “பணம் மட்டுமே அரசியல் அல்ல. வைக்கம் நூற்றாண்டு விழா வருகிற 28ம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் ஈரோட்டில் இருந்து வைக்கம் வரை பிரம்மாண்ட ஊர்வலத்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கேரள காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இணைந்து பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணி வருகிற 28ம் தேதி ஈரோட்டில் இருந்து துவங்கி 30ம் தேதி வைக்கம் சென்றடையும். அதற்கான ஏற்பாடுகளை ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமைலான குழு ஏற்பாடு செய்து வருகிறது.
அந்த பேரணியை நான் துவக்கி வைக்கிறேன். அந்தப் பேரணி வரலாற்று சிறப்புமிக்க பேரணியாக அமையும். தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பொழுது வைக்கதில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டார். அங்கேயே தங்கியிருந்து போராட்டம் நடத்தினார் சிறை சென்றார்.
அந்த போராட்டத்தில் காந்தியும் பங்கேற்றார். எனவே அந்த நினைவை போற்றுகிற வகையில் ஈரோட்டில் இருந்து வைக்கதிற்கு பேரணி நடைபெற இருக்கிறது” என்றார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு