மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சமையல் எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க 10 ஆயிரம் கோடி ரூபாயிலான சிறப்பு திட்டத்திற்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களிடம் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அப்போது மராத்தி, பாலி, பிராக்ருதம், அசாமி, வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் வரலாற்றுச்சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பட்டியலில் மேலும் 5 மொழிகள் இணைந்துள்ளன.