சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ரினோவேஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கலைஞர் அரங்கத்தை பொறுத்தவரை திமுக பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என கட்சி சார்ந்த எல்லா முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும் இடமாகும். அதேபோல் தனியாருக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. நகரின் முக்கியப் பகுதியான தேனாம்பேட்டையில் கார் பார்க்கிங் உள்ளிட்ட விசாலாமான இட வசதியுடன் இருப்பதால் இதன் வாடகை ரூ.3 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தான் செய்தியாளர்கள் சந்திப்பிலும், ”கலைஞர் அரங்கம் புதுப்பிக்கப்படுவதால் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இந்த ஹோட்டலில் நடைபெற்றது” என அமைச்சர் நேருவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்திற்குள் மராமத்து பணிகள் நிறைவடைந்து அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கம் புதுப் பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருணாநிதியால் கலை நுணுக்க வேலைப்பாட்டுடன் பார்த்து பார்த்துக் கட்டப்பட்ட கட்டிடம் கலைஞர் அரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விவகாரம் என்னவென்றால், கலைஞர் அரங்கத்தில் திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட சுப நிகழ்வு நடத்துபவர்கள் சைவம் மட்டுமே பரிமாற அனுமதி. நான் வெஜ் உணவு வகைகள் சமைக்க அங்கு அனுமதி தரப்படுவதில்லை. இதனால் தான் பெரும்பாலானோர் அருகாமையிலேயே உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்கிறார்கள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு