திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 25 ‘அருளுடைமை’ (தொடர்பு கருதாமல் எல்லாரிடத்திலும் இரக்கம் காட்டுதல்)
குறள் 247:“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு “,
பொருள்:பொருட் செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லாதது போல, அருட்செல்வம் இல்லாதவர்க்கு மறு உலக இன்பம் இல்லை எனப்படுகிறது. அப்படியே திருமறையும் மத்தேயு 5: 7ல் “இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.” என்றும், மத்தேயு 6: 19ல் “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.” என்றும், சங்கீதம் 112: 5ல் “இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.”திருக்குறளும்திருமறையும் அருளுடைமை எனும் இரக்க குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமிu திருக்குறள் உண்மை உரை பேரவை.