மாற்றத்தக்க ஆளுகையின் நெறிமுறைகளை எடுத்துக் காட்டும் வகையில், மத்திய அரசு 2025-ம் ஆண்டுக்கான நாட்காட்டியைத் தயாரித்துள்ளது. மக்கள் பங்களிப்பே மக்களின் நலன் என்பது நாட்காட்டியின் மையக் கருப்பொருளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரயில் பவனில் இன்று நாள்காட்டியை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள கண்கூடான பலன்களை எடுத்துரைத்தார். ஏழைகளின் நலனை மேம்படுத்துவதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் உருமாற்ற ஆளுகையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பங்களிப்பை அவர் சுட்டிக்காட்டினார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், தகவல், ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் திரு திரேந்திர ஓஜா மற்றும் மத்திய தகவல் தொடர்பு பணியகத்தின் தலைமை இயக்குநர் திரு யோகேஷ் பவேஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு