திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 27 ‘தவம்’ (உடலை வாட்டும் துறவறப் பயிற்சி)
குறள் 261: “உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகன் செய்யாமை
அற்றே தவத்திற் குரு”
பொருள்: தமக்கு வரும் துன்பங்களை எல்லாம் பொறுத்து கொள்ளுதலும் பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாதிருதலும் ஆகிய அவ்வளவே, தவத்தின் வடிவாகும் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் பிலிப்பியர் 2:7-8ல்”தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” என்றும், லூக்கா 23: 34ல்”அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.” என்றும் திருக்குறளும் திருமறையும் தவம் எனும் நற்பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதைஅறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை