மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விஸ்மிதா தேஜ் உடன் இணைந்து சென்னையில் 30.01.25 அன்று நெய்வேலி அனல் மின் நிலைய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் செயல் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது பேசிய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, 2047-ம் ஆண்டுக்குள் “வளர்ச்சியடைந்த இந்தியா” உருவாக்குவதில் பிரதமரின் பரந்த தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். இந்தியாவில் சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்.எல்.சி.ஐ.எல் திகழ்கிறது என்று அவர் பாராட்டினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்நிறுவனம் பெரிய அளவில் பன்முகப்படுத்தப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்த அவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் 1 ஜிகாவாட் அளவைக் கடந்த நாட்டின் முதல் பொதுத்துறை நிறுவனம் இது என்று கூறினார்.தாளபிரா, தெற்கு பச்வாரா, வடக்கு தாடு, மச்சகட்டா மற்றும் பத்ரபாரா ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி சுரங்கத் தொழிலில் திறன் அதிகரிப்பதில் என்.எல்.சி.ஐ.எல் முயற்சியை அமைச்சர் பாராட்டினார். பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட தாளபிராவில் 3×800 மெகாவாட் அனல் மின் திட்டத்தை நிர்மாணிப்பதில் என்.எல்.சி.ஐ.எல் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பாராட்டினார். ராஜஸ்தான், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் பெரிய அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அதிகரிப்பதிலும், இதர பசுமை முன்முயற்சிகளிலும் என்.எல்.சி.ஐ.எல் நேர்மையான முயற்சிகளுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.குழந்தைகள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏராளமான ஆற்றலையும் வாய்ப்புகளையும் கொண்ட சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயுமாறு என்.எல்.சி.ஐ.எல் க்கு அவர் அழைப்பு விடுத்தார்.என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட விபத்து காப்பீட்டுத் திட்டத்தை இரண்டு மாத காலத்திற்குள் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு என்.எல்.சி.ஐ.எல் நிர்வாகத்திடம் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “பாரம்பரியம்” என்று பெயரிடப்பட்ட அருங்காட்சியகத்தை மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார். “என்.எல்.சி.ஐ.எல் விங்ஸ்” என்ற புதிய மொபைல் செயலி மற்றும் என்.எல்.சி.ஐ.எல் இணைய வலைத்தளத்தின் புதிய பதிப்பையும் அவர் தொடங்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு