சென்னை:
ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இத்தொகையை வழங்க தற்போது அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக இலவச பொருட்கள் மற்றும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பண்டிகைக்குள் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும் என்ற சூழலால் ரேஷன் கடை ஊழியர்களின் பணி சுமை இரண்டு மடங்காக அதிகரித்தது.
தற்போது ரேஷன் கடைகளில் எடையாளர், கட்டுநர், விற்பனையாளர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ள நிலையில் பணியில் உள்ள ஒரு ஊழியர் இரண்டுக்கும் மேற்பட்ட கடைகளை கவனித்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
அதாவது பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட போது ஏற்பட்ட கூடுதல் பணி சுமை காரணமாக ஒரு கார்டுக்கு ரூ. 5 ஊக்கத்தொகை வழங்கிட தமிழக அரசிடம் கூட்டுறவுத்துறை அனுமதி கோரியுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு