திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 28 ‘கூடா ஒழக்கம்’ (துறவரத்திற்கு ஒவ்வாத தீய ஒழுக்கம் அதாவது மறைவாக சிற்றின்பம் நுகர்தல்)
குறள் 279:“கணை கொடிது யாழ்கோடு சேவ்விதுஆங் அன்ன
வினைபடு பாலால் கொளல்”
பொருள்:அம்பு வடிவில் நேராய் இருந்தாலும் செயலில் கொடியது. யாழ் தண்டால் வலைந்திருந்தாலும் செயலில் இனியது. அங்ஙனமே தவம் செய்பவருள்ளும் யார் கொடியர் யார் நல்லவர் என்பதை அவரவர் கோலத்தால் கொள்ளாமல், செயல் வகையாலேயே அறிந்து கொள்ளல் வேன்டும்எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் மத்தேயு 7:15-16ல் “கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?” என்றும், 1சாமுவேல் 16: 7ல்”கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.” என்றும்திருக்குறளும் திருமறையும் துறவறத்திற்கு ஒவ்வாத கூடா ஒழக்கத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை.