ஊழலை ஒருபோதும் சகித்துகொள்ள முடியாது என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்று அவர் அளித்துள்ள பதிலில், அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை வரவு வைத்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வெளிப்படையான முறையில் வழங்குதல், மின்னணு முறையில் பொது கொள்முதல் டெண்டரை செயல்படுத்துதல், அரசின் மின்னணு சந்தை மூலம் கொள்முதல் செய்தல் உள்ளிட்டவை அடங்கும்.மத்திய அரசின் குரூப் ‘பி’ (அதிகாரப்பூர்வமற்ற அதிகாரி பணியிடம்) மற்றும் குரூப் ‘சி’ பதவிகளுக்கான ஆட்கள் சேர்ப்பில் நேர்காணல் நடவடிக்கையை நிறுத்துதல், ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான நடைமுறையில் குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்குவதற்காக விதிகளில் திருத்தம் மேற்கொள்ளுதல், திருத்தி அமைக்கப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை ஊழல்களைத் தடுக்க உதவும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு