கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களில் பெண்களுக்குப் பயிற்சி வழங்குவதன் மூலம் அவர்களது வேலைவாய்ப்புக்கான சூழல் அதிகரித்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக நகர்ப்புறங்களுக்கு இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில தசாப்தங்களாக தனிக்குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடியும். பணிக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளைக் கவனிப்பது, கூட்டுக் குடும்பத்தில் சாத்தியமானதாக இருந்தபோதிலும், தனிக்குடும்பங்களில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதில் பகல் நேரக் குழந்தை பராமரிப்பு மையங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இது போன்ற குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் வழங்கும் சேவைகள் தரம் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அவசியம் இப்போது எழுந்துள்ளது.இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பராமரிப்பு மையங்கள், ஒரு வீட்டுப் பணியாகவே கருதப்படுகிறது. இது போன்ற குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படுவதுடன், கண்ணியமான பணி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குமான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது.இதைக் கருத்தில் கொண்டு அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையங்களை நிறுவுவதற்கான முன்மொழிவுகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து பெறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 11,395 அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு