இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு பின் முதன் முறையாக இந்நிறுவனம் லாபம் ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனை புதிய கண்டுபிடிப்பு, தீவிரமாக வலைப்பின்னலை விரிவாக்குதல், செலவைக் குறைத்தல், பயன்பாட்டாளரை மையப்படுத்திய சேவை முன்னேற்றம் ஆகியவற்றில் நிறுவனம் கவனம் செலுத்தியதைப் பிரதிபலிக்கிறது.பிஎஸ்என்எல் வெற்றிகரமாக தனது நிதிச் செலவையும், ஒட்டுமொத்த செலவினத்தையும் குறைத்ததால் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு நஷ்டம் குறைந்தது என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு ஏ ராபர்ட் ஜெ ரவி தெரிவித்தார்.இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை அதிகரிக்கும் அதே வேளையில் உயர்தரமான கட்டுப்படியான செலவில் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குவதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த நிதி நிலைமை சுட்டிக்காட்டுகிறது.பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மாற்றத்திற்கான பயணத்தில் உறுதியான ஆதரவை வழங்கியுள்ள பயன்பாட்டாளர்கள் மற்றும் சமபந்தப்பட்ட துறையினர், மத்திய அரசு ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக திரு ரவி கூறினார்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு