தமிழ்நாடு வட்ட அளவிலான ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம் 19.03.2025 (புதன்கிழமை) அன்று பகல் 3:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நேர்முகமாக நடைபெற உள்ளது.ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம் சென்னை என்கிற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ (அ) bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 28.02.2025 பகல் 3:00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு வட்டம், முதன்மை அஞ்சல் துறை தலைவர் மூத்த கணக்கு அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார். புகார்களுடன் மின்னஞ்சல் ஐடி மற்றும் அலைபேசி எண்ணையும் தயவுசெய்து தருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு