சென்னை:
தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று உகாதி என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் தொடங்கியது.
சட்டசபை தொடங்கியதும் சபாநாயகர் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஆணவ கொலை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஈபிஎஸ் கொண்டு வந்த தீர்மானத்துக்கு முதல்-அமைச்சர் நாளை பதிலளிப்பார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் தொடங்கியது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு