சென்னை:
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டி.யு.ஜெ) ஒருங்கிணைத்து, மாநில அளவில் பத்திரிகையாளர்களுக்கான கோரிக்கை கருத்தரங்கம் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு அரங்கத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கே.முத்து, துணைப் பொதுச் செயலாளர் எஸ்.டேவிட்குமார், அமைப்புச் செயலாளர்கள் ஏ.தமிழ்ச்செல்வன், பி.ஆர்.வேளாங்கன், இணைச் செயலாளர்கள் எம்.கே.சாகுல் ஹமீது, ஆர்.முருகக்கனி, ஏ.ஆர்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை மாவட்ட செயலாளர் எம்.ஜாபர் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் போளூர் சுரேஷ் துவக்க உரையாற்றினார்.‘
இந்நிகழ்வில் கதொழிலாளர் முன்னேற்ற சங்க, பேரவை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.சண்முகம் லந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் மற்றும் அச்சு, காட்சி ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளும் ஏராளமாக உள்ளது. இவை அனைத்தையும் தமிழ்நாடு அரசின் அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வேன் என உறுதி அளித்தார்.
சி.ஐ.டி.யு. மாநில தலைவர் அ.சவுந்தர்ராஜன் பேசுகையில், தாம் உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் நல வாரிய ஆலோசனை குழுவில் பத்திரிகையாளர்கள் சங்க பிரதிநிதிகளையும், நல வாரியத்தில் இணைப்பதற்கு வலியுறுத்துவேன். பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை சம்பந்தமாக நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே குரல் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம், கண்டிப்பாக முயற்சிகள் மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார்.
தொடர்ந்து ஏ.ஐ.டி.யு.சி மாநில பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன செயல் தலைவர் எம்.துரை பாண்டியன், தீக்கதிர் நாளிதழ் பொறுப்பு ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மெட்ராஸ் ரிப்போர்ட்ஸ் கில்ட் தலைவர் ஆர்.ரங்கராஜன், மெட்ராஸ் யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (எம்.யூ.ஜெ.) தலைவர் எல்.ஆர்.சங்கர், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதி தமிழன், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர், ஏ.ஜே.சகாயராஜ், அறம் இணையதள ஆசிரியர் சாவித்திரி கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சென்னை மாவட்ட டி.யூ.ஜெ. தலைவர் எஸ்.பி.தேவேந்திரன் நன்றி கூறினார்.
இக்கருத்தரங்கில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருச்சி, விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சங்கப் பிரதிநிதிகள், சென்னையில் உள்ள, சகோதர பத்திரிகையாளர்கள் சங்கங்கள், அமைப்புகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கில், நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் வருமாறு:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள பத்திரிகையாளர்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பினை (லிணீதீஷீuக்ஷீ சிஷீபீமீ) ரத்து செய்ய வேண்டும்.
நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த, வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். அங்கீகார அட்டை, அடையாள அட்டை என்ற பேதம் இல்லாமல் ஒரே அடையாள அட்டையாக வழங்க வேண்டும்.
சிறு பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். பத்திரிக்காளர் நல வாரியத்தை பொறுத்தவரை, நல வாரியத்தின் செயல்பாடுகள், நிதி ஆதார விசயங்களில் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும்.
மற்ற நல வாரியங்களை போன்று பத்திரிக்கையாளர் நல வாரியத்திலும் பத்திரிக்கையாளர் சங்கங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் அரசு வழங்கிய அங்கீகார அட்டை உள்ளவர்கள் மட்டுமே உறுப்பினராக சேர முடியும் என்ற விதியால் ஏறக்குறைய 90 விழுக்காடு பத்திரிகையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை உருவாகியுள்ளது. அனைவரையும் வாரியத்தில் இணைக்கும் விதத்தில் விதிகளை தளர்த்த வேண்டும்.
தொலைக்காட்சியில் பணிபுரியும் செய்தியாளர்கள் ஊதிய குழு வரம்பிற்குள் வராததால், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இயலவில்லை என நலவாரியம் கூறியுள்ளது வேதனையாக உள்ளது.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே காட்சி ஊடகத்தையும், ஊதியக்குழு வில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற இரு அவையின் உறுப்பினர்களை கொண்டு, பாராளுமன்றத்தில் ஊடகங்களை ஊதிய குழுவில் இணைக்க அழுத்தம் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை “மீடியா கவுன்சில்” என்று பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
பத்திரிகையாளர் நலவாரியத்தின் முக்கிய பணியே 18 உடல் உழைப்பு நல வாரியம் எப்படி இயங்குகிறதோ அதே அடிப்படையில் ஊரக பத்திரிகையாளர்களை உறுப்பினராக பதிந்து சரி பார்க்கும் பணிகளை செய்வது முழு நேர பணியாகும். அப்படி இருக்கையில், ஓய்வூதிய விண்ணப்பித்தினை சரிபார்த்து பரிசீலிப்பதில் கவனம் செலுத்தினால், வாரிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கவனம் செலுத்த இயலாது. எனவே, கலைக்கப்பட்ட ஓய்வூதிய குழுவை மீண்டும் அமைத்து ஏற்கனவே இருந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களை மீண்டும் நியமிப்பதுடன், புதிய உறுப்பினர்களையும் இணைத்து, மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழு கூடி விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதிவாய்ந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய, மருத்துவ உதவி பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற, ஆண்டு ஊதியம் ரூ.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட வேண்டும். தாலுக்காவில் பணியாற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் விலையில்லா பேருந்து அட்டை வழங்க வேண்டும்.
மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ளது போல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்பு சட்டத்தினை தமிழ்நாடு அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டுள்ளது.