தாம்பரம்:
சென்னை தாம்பரத்திற்கு உட்பட்ட பல்லாவரம் வட்டத்திற்கு உட்பட்ட பல்லாவரம் ராயப்பேட்டை ஏரி, சேலையூர் பாரத்நகர் ஏரி, தாம்பரம் ராஜகீழ்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, குரோம்பேட்டை வீரராகவன் ஏரி ஆகிய ஏரி பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த பகுதிகளில் பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு