சென்னை:
மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் இருதயம் வல்லரசு விடுத்துள்ள அறிவிப்பில், தமிழக அரசு சார்பில் கிறித்தவர்களுக்கு 2007 – ஆண்டு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் வழங்கப்பட்டது.
தமிழக ஆயர் பேரவை அதை ஆய்வு செய்யாமலும், மக்களிடம் கேட்டரியாமலும் அரசாங்கத்திடமே திருப்பி கொடுத்து விட்டது. இதனால் 2008 – முதல் இந் நாள் வரை (2023ம் ஆண்டு) கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தமிழக ஆயர் பேரவையோ, குருக்களோ 3.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து வாய் திறக்கவில்லை. எனவே பல்வேறு இயக்கங்களின் தலைவர்களே, தங்கள் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு பற்றிய தகவல்களை பேசி புரிய வைய்யுங்கள்.
அனைவருக்கும் 3.5 % இட ஒதுக்கீட்டை 5 சதவீதமான உயர்த்தி வழங்க வேண்டும். அதை தமிழக ஆயர் பேரவை வழியாக தமிழக அரசுக்கு தெரிவித்து இட ஒதுக்கீட்டை பெற வேண்டும். இது பற்றிய கருக்தை விளக்கமாக தமிழக அரசுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்து கிறிஸ்த்தவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு