சென்னை:
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக செய்தி வெளியீட்டு பிரிவு மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்ச் செல்வன், வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பத்திரிகையாளர்கள் தங்களின் துறை சார்ந்த தொழில் தகுதியினை மேம்படுத்திக் கொள்வதற்கும், திறனை அதிகரிக்கவும், மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் சிறந்த விளங்கவும் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதித் துறை, காவல் துறை, அரசியல் துறை, பத்திரிகை துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த மூத்த வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை, கலைவாணர் அரங்கில் நாளை (28.03.2023) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இச்சிறப்பு பயிற்சியில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள், செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு