சென்னை:
தங்கம் என்றால் விரும்பாதவர்கள் யார்தான் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்க ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். தங்கம் அணிந்தால் அது ஒரு கவுரவம் என்றே கருதப்படுகிறது. இதனால் ஏராளமான பெண்கள் தங்க ஆபரணங்களை வாங்குவதை மிகுந்த ஆர்வமாக கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது. இது தங்க நகையை விரும்பும் பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,565க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.76.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு