சென்னை:
சென்னை அரசு ஒமந்தூரார் மருத்துவ கல்லூரி பொது மருத்துமனையில் நேற்று செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம் மற்றும் கோவிட் 19 பற்றிய நூல் அறிமுக விழா கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தும், நூலை வெளியிட்டும் பேசினார்.
அப்போது, கல்லூரி முதல்வர் ஜெயந்தியின் கோவிட் 19 காலத்தில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றவர் எனக்கூறி வாழ்த்தி பேசினார்
மேலும், கோவிட் 19ஐ கட்டுபடுத்திவிட்டோம் என்று நினைத்தோம். ஆனாலும் கட்டுபடுத்த முடியவில்லை. வேறு ரூபத்தில் வந்துகொண்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருபவர்களையும் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
நான் எதிர்கட்சியாக இருக்கும் போது தடுப்பு ஊசி போடுவதற்காக நானும் என் மனைவியும் ஒமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். எங்களை ஓமந்தூரர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி எங்களிடம் கனிவோடு நடத்து கொண்டார். அவர் அறையிலேயே எங்களுக்கு ஊசி போட்டார்.
17 விதமான மருத்துவ திட்டம் இவர் முன்னிலையில் இந்த மருத்துவமனையில் நடந்தது. இவர் பணிஒய்வு பெருகிறார். இவர் கோவிட் காலத்தில் செய்த அயராத பணிகளை அசை போட்டுக் கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு இவர் சிறப்பாக செயல்பட்டார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார்.
விழாவில் மருத்துவக்கல்வி இயக்குனர் மரு.ஆர்.சாந்திமலர், முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், சென்னை ஐஐடி பொறியியல் வடிவமைப்புத் துறையின் துணை ஆசிரியர் மரு.விநாயக் எஸ்.ரெங்கன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஏற்புரை வழங்கினார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு