சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காலை சிற்றுண்டி, கஞ்சா தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:
சட்டப்பேரவையின் கூட்டத்தின்போது எதிர்கட்சித்தலைவர் எடப்பாடிபழனிச்சாமி ஆரம்பத்திலேயே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விழுப்புரத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முதலமைச்சர் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார். குடும்ப பிரச்சனையின் காரணமாக நடைபெற்ற அந்த சம்பவத்திற்கு காவல்துறையினர் மேல்விசாரணைநடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த பிறகும்கூட தொடர்ச்சியாக அந்த 2 திமுகவை சேர்ந்தவர்கள் அணிந்திருந்த சட்டையில் முதல்வர் படம் இருந்ததை கூறி அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறி, கஞ்சா நடமாட்டம் தமிழ்நாட்டில் பெருகிக் கொண்டிருக்கிறது என்கின்ற வகையில் செய்தியாளர் சந்திப்பிலே தெரிவித்திருந்தார்.
கஞ்சாவும் போதை வஸ்துக்களான குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துக்களும் கூடுதலாக இருந்தது, கட்டுக்கடங்காமல் இருந்ததும் யார் ஆட்சிக்காலத்தில் இருந்தது என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்திருந்தார். தமிழ்நாடுமுதலமைச்சர்அவர்கள்பொறுப்பிற்குவந்தவுடன் தமிழ்நாட்டில் கஞ்சா எங்கும் பயிரிடப்படாத நிலைஇருந்துக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் பாதுகாப்பாக சொல்லும்போதும், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சொல்லும்போதும் கஞ்சா விற்பனை தாரளமாக இருக்கிறது கிறது என்கின்றார். அவர்களிடத்தில் நாங்கள் வைக்கின்ற கோரிக்கை கஞ்சா விற்பனை என்பது எங்கே இருக்கிறது என்ற தகவலை சொன்னால் அந்த கஞ்சாவை காவல் துறையினர் மூலம் அழித்தொழிப்பதற்கும் சம்பந்தபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் சரியாக இருக்கும்.
சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் கஞ்சா தமிழ்நாட்டில் உள்ளது என்றெல்லாம் சொல்லுவது, அவர் செய்யும் அரசியலுக்கு அழகல்ல. அதிமுக ஆட்சியில், இந்த போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அன்று எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது சென்னையில் அனைத்து கடைகளிலும் இந்த குட்கா, பான்பராக் போன்ற பொருட்கள் மிக தாராளமாக கிடைக்கிறது என்றுகூறி 21 சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தபோதை பொருட்களை கொண்டுவந்து சட்டமன்றத்திலேயே காட்டினோம். அப்போது உண்மையிலேயே அக்கரை இருந்திருந்தால் சட்டப்பேரவை தலைவரிடத்தில் சொல்லி எதிர்கட்சித்தலைவர் சென்னையில் எந்தெந்தகடைகளில் போதை பொருட்களை வாங்கினார் என்ற விவரங்களை கேட்டுப்பெற்று, சம்பந்தபட்ட கடைகளில் விற்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தால் உண்மையான அக்கறை உள்ளவராக இருந்திருப்பார்.
அதிமுகவினர் தங்களுக்கு யார்யாரை பிடிக்காதோ அவர்களுக்கு எதிராககஞ்சாவழக்கைபோடுவதைவாடிக்கையாகசெய்பவர்கள். முன்னர்காமராஜரின்உதவியாளராகஇருந்தவைரவன்மீதும்கஞ்சாவழக்கைபோட்டவர்கள்தான்இன்றைய எதிர்கட்சியினர். அதனால் தான் இன்று எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் எந்தகெட்ட சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு கஞ்சாதான் காரணம் என்றுகூறிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடுமுதலமைச்சர் தலைமையிலான இந்த அரசே எந்த தொண்டு நிறுவனத்தின் உதவி இல்லாமல் சிறப்பாக காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது எடப்பாடி பழனிச்சாமி பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால்தான் இந்த அரசின்மீது தேவையில்லாமல் குறைகூறி வருகிறார்.
முன்னர்சர்.பி.டி.தியாகராயரால் சென்னை மாகானத்தில் ஒருசில பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட மதியஉணவு திட்டத்தினை பின்னர் காமராஜரால் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் அது டாக்டர்.எம்.ஜி.ஆரால் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. இதில் எந்த ஐயமும் இல்லை. அதன் பிறகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சத்துணவு என்றால் உண்மையிலேயே சத்துணவாக இருக்கவேண்டும் என்று சொல்லி வாரத்திற்கு 5 முட்டைகள் வரை ஏழை எளிய மக்களின் குழந்தைகள் சாப்பிடும் வகையில் திட்டத்தினை செயல்படுத்தினார். “காலை உணவு திட்டம்” என்று குறிப்பிட்டாலே நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சரின் பெயரே நம்முடைய நினைவுக்கு வரும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு