சென்னை:
சென்னை – கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் விமானப்படை தளம் வந்தார். அங்கிருந்த சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை – கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இதுவாகும். இந்தியாவில் இயக்கப்படும் 12-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து, தாம்பரம் – செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இதைத் தவிர்த்து, திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை கோவை, திருவாரூர், நாகப்பட்டிணம் பயணிகளுக்கு பயனளிக்கும் என்ற ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில் பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் ரூ.294 கோடியில் நிறைவடைந்துள்ளது. நாகை மாவட்டம் அகஸ்தியம் பள்ளியில் இருந்து உப்பு ஏற்றிச் செல்ல இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு