சென்னை:
சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தவிர யாரையும் சந்திக்கவில்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.
அண்ணாமலை மிஸ்சிங்
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரதமர் பங்கேற்ற அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
அனுமதி மறுப்பு
சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தவிர பிற அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
விமான நிலையம் வந்த பிரதமரை வரவேற்க அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.