அறன் வலியுறுத்தல்
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவனுக்கும், பல்லக்கின் மேல் அமர்ந்து செல்பவனுக்கும் இடையே இருப்பதுவே அறத்தின் வழி என்று எண்ண வேண்டா. இது தவறான எண்ணமாகும். எவ்வாறு என்றால் மனித நேயமற்ற சிந்தனை இது ஆகும். இச்சிந்தனை தண்டனைக்கு உரியது. தண்டனையை வருவிக்கும்.