திருவள்ளூர்:
அய்யப்பன்தாங்கல் அருகே ரவுடி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அய்யப்பன்தாங்கல், பெரிய பணிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் அப்பகுதியில் பெரிய ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அய்யப்பன்தாங்கல், சுப்பிரமணியம் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் சம்பவத்தன்று இரவு பைக்கில் வினோத் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வினோத்தை வழி மறித்தது. இதனால் அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்தவரை விரட்டிச் சென்று கொலை செய்தது. இது குறித்து, தகவல் அறிந்த போரூர் எஸ்ஆர்எம்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு