ஸ்ரீபெரும்புதூர்:
இறந்த பிறகு அள்ளிப்போடவும்… கொல்லி வைக்கவும் வாரிசு இல்லாத தம்பதியரின் ஈமச்சடங்கை நானே செய்வேன் என்று ஆத்மயோகி யோகனந்தா தனது 48வது அவதார திருநாளில் கூறினார்.
அறப்பணி ஆன்மீக பேரவை – அறப்பணி ஆன்மீக அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீ ஆத்மயோகி யோகனந்தா குருஜீயின் 48 வது அவதார திருநாள் இன்று திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், உளுந்தை, முதுகூர் கிராமத்தில் உள்ள அறப்பணி ஆன்மீக அறக்கட்டளையில் நடைபெற்றது.
விழாவில் காலை 9.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை யாகம் நடத்தப்பட்டு பூர்ணாகுதி, சங்கல்ப்பம் ஆத்ம யோகி யோகானந்தர் குருஜிக்கு நடைபெற்றது. இதில் சாதுக்கள், துறவிகள், சித்தர்கள் திரளாக பங்கேற்று அவருக்கு அருளாசி வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ் மரமான, மறக்கப்பட்ட குடை தானத்தை சாதுக்கள், துறவிகள், சித்த புருஷர்கள் மற்றும் பக்தர்களுக்கு குருஜீ வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆத்ம யோகி ஸ்ரீ யோகனந்தா குருஜி, எனது அவதார நாளில் அறப்பணி ஆன்மீன பேரவை – ஆன்மீக அறக்கட்டளை சார்பில் இறந்துபோகும் அனாதைகள் அனைவருக்கும் கடைசி காரியங்களை முறையாக செய்து, காசி ஹஸ்தி எனப்படும் முறையில் அவர்களின் ஈம சடங்குகளை செய்து முடிக்க இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை ப்ரீசர் பாக்ஸ் உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும். சடலத்தை எடுக்க ஆளில்லாமலும், கொல்லி வைக்க பிள்ளை இல்லாமலும் ஏங்கும் அனைத்து தம்பதிகளின் ஈமச் சடங்கை தாமே செய்வதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஏராளமான சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு