தமிழகத்தில் பிப். 25, 26ம் தேதிகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்வு மையங்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தேர்வர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
தட்டச்சு தேர்வு:
தமிழகத்தில் அரசு அனுமதியுடன் 30,000க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு பிப். 25, 26ம் தேதிகளில் தட்டச்சு தேர்வு நடைபெறும் என்று தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்தது.
இந்த நிலையில் நிர்வாக காரணங்கள் மற்றும் தேர்வர்கள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் தட்டச்சு தேர்வு மையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில தேர்வு மையங்களில் தேர்வர்கள் ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை அதனால் அத்தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையங்களாக Existing Centre தேர்வு செய்தவர்களுக்கு புதிய மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற தேர்வர்களுக்கு இரண்டாவது Option ஆக தேர்வு செய்த தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றப்பட்ட மையங்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர் தெரிவித்துள்ளார்.