சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி இடையே செல்லும் போது ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.
எனினும் அதிர்ஷ்டவசமாக மின்சார ரயிலில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் தடம் புரண்ட ரயில் பெட்டியை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.