வணக்கம், வாழ்த்துக்கள்.
அக்குபிரசர் இன்று தெளிவது அக்குபிரசர் மருத்துவ முறை பழங்காலத்திலிருந்து பயன்பாட்டில் உள்ள முறையாகும். இது விரல்கள் அல்லது மழுக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி
உடலின் வர்ம புள்ளி உள்ள இடங்களை தூண்டி மனிதனின் நோய் எதிர்ப்புசக்தியினை வளர்ப்பதாகும். இந்த குறிப்பிட்ட இடங்களை தூண்டுவதால் தசைகளில் இறுக்கம் உருவாகும் அதனால் ஏற்படும் இரத்த ஓட்டம் அதிகரித்து உயிரோட்டத்தை சரிசெய்யும்.
இதில் அக்குபிரசர் முறை மற்றும் அக்குபஞ்சர் முறை ஆகிய இரு முறைகளிலும் ஒரே புள்ளிகள் பயன்படுத்தப்படுகிறது. அக்குபிரசர் மென்மையாக விரலையோ
அல்லது பொருளையோ வைத்து உபயோகப்படுத்தும் முறையாகும், அக்குபஞ்சர் முறை ஊசியினைக்கொண்டு செய்வதாகும் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பிருந்து அக்குபிரசர் முறை பயன்படுத்தப்படுகிறது. இது உடலின் சுமார் 3000 நிலைகளை சரிசெய்வது பற்றி, பதிவு செய்யப்பட்டு முழுமையாக உள்ளது. லேசர் கதிர்கள் வீசுவதன் மூலமும் சீர் செய்யப்படுகிறது. அழுத்தத்தின் மூலமாகவும், மின் ஆற்றலின் தூண்டுதல் மூலமாக ஊசிகளுக்கு பதிலாக கதிர்வீச்சினை பயன்படுத்துதல் மூலமாகவும் குறிப்பிட்ட நடுக்கோடுகளில் பலனளிக்கிறது. மொத்தம் 14 வழித்தடங்கள் உள்ளன அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட உடல் உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிகளை சமன் செய்வதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை பெற முடிகிறது. வலியோ அல்லது உடல்நலக்குறைவோ இருந்தால்
உடலில் சக்தி தடைபடுதல் அல்லது வீன் ஆகுதலின் அறிகுறியாகும். சரியான புள்ளியை
மிக மென்மையாக வர்மப் பகுதியில் உணர்வின் மூலம் கண்டறியும் வரை விட்டு
பிறகு அழுத்தத்துடன் போதுமான அளவு புள்ளியை தொடர வேண்டும். ஐந்து நொடிகள்
மற்றும் ஐந்து நொடிகள் விட்டு விட்டு அழுத்த வேண்டும். ஒரு நிலைக்கு ஒரு நிமிடம் போதுமானதாகும். தலைவலி, கண்வலி, புரை அழற்சி, கழுத்துவலி, முதுகு வலி, பிடறி வலி, மன அழுத்தம், வயிற்றுப்புண், மன இறுக்கம் இன்னும் பல வகையில் உடல் ஆரோக்கியத்தை தந்து சிறந்து விளங்குகிறது. மேலும் உடலினை இயல்பான நிலையில் வைத்திருக்க பயன்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தையும் நோய் நீக்கும் வழிகளுக்கும் புள்ளியில் தொடும் சிகிச்சை சிறந்ததாகும்.
நன்றி எம் உறவுகளே.
என்றும் உங்கள் நலநெறியாளன்..
ஜே. அன்புரோஸ்
9360456063