இன்று.. உணவுக்கட்டுபாட்டு முறைகள் இயற்கை தன்மையுடன் பருவக்காலத்திற்கேற்ற செழுமையான பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், கொட்டைகள் ஆகியவை சிறந்த பலனைத்தரும்.
இந்த உணவு முறையினை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை:
திரவ உணவு: எலுமிச்சைபழச்சாறு, இளநீர், காய்கறிச்சாறு, கீரைச்சாறு, வெண்ணய், கோதுமை புல்சாறு ஆகியவை திரவ உணவாகும். இனிமையான உணவு:
பழங்கள், நீராவி மூலம் வேக வைத்த காய்கள், முளைகட்டிய தானியங்கள் பயிர்கள், காய், கீரைகளில் செய்த சட்னி, துவையல்கள். ஆக்கபூர்வமான உணவுப்பழக்கம்: தேய்த்து பளபளப்பாக்காத பாரம்பரிய அரிசிகள், சிறு தானியங்கள், முழுமையான மாவு, முளை கட்டிய தானியங்கள், கிழங்குகள் தயிர் போன்றவை ஆகும்.
கார வகை உணவுகள், உடல் நலத்தை உயர்த்தி, உடலை தூய்மையாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதனை பெறுவதற்கு சரியான சரி விகித உணவு தேவையாகும். உடல் நலனை பேணிட உணவு வகைகளில் 20% அமிலத்தன்மையும் 80% காரத்தன்மையும் இருத்தல் வேண்டும். சம நிலை உணவு உடல் நலத்திற்கு தேவையானதாகும். இயற்கை மருத்துவ முறையில் உணவே மருந்தாக உள்ளது.
தொடர்புக்கு – ஜே. அன்புரோஸ், 9360456063