புதுச்சேரி:
புதுவை அரும்பார்த்தபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் வினோத் (வயது 34). ஜிப்மரில் இளநிலை எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (30). வினோத்தும், அவரது அண்ணன் சம்பத்தும் சேர்ந்து புதுவை காமராஜர் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் வினோத்துக்கும், அவரது மனைவியின் சகோதரர் வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களாக சத்ரியன், சிலம்பு, கவியரசன் ஆகியோர் மதுபோதையில் வினோத்தின் ஓட்டலுக்கு வந்து பிரியாணி கேட்டனர். அதற்கு அவர் பிரியாணி இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் வினோத்தை தாக்கினர். மேலும் கடையில் இருந்து பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வினோத் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், கவியரசன் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு