சென்னை:
சென்னை பாரிமுனை பூக்கடை காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் கோபி என்பவர் பழக்கடை வைத்துள்ளார். இந்தநிலையில் இன்று காலை பூக்கடை சி 1 காவல்நிலைய உதவி ஆய்வாளர் கோட்டீஸ்வரன் கடையை மூட வலியுறுத்தி உள்ளார்.
கடையை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும் போதே வேகமாக மூடு என்று ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் கோட்டீஸ்வரன் கோபியை தாக்கியுள்ளார்.
அப்போது கடைக்கு வந்த கோபியின் சகோதரி காவேரி தனது சகோதரரை அடிக்க வேண்டாம் என கெஞ்சியுள்ளார். இதில் மேலும் கோபமடைந்த உதவி ஆய்வாளர் கோட்டீஸ்வரன், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இருவரையும் சரமாரியாக தாக்கியதில், காவேரிக்கு வலிப்பு ஏற்பட்டு காவல் நிலையத்திலேயே துடிதுடித்து மயங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து காவேரி தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 201வது வார்டில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பூக்கடை வியாபாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு