டெல்லி, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்கவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது. இதுபற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று 4-வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என 4வது நாளாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன. இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 3 நிமிடங்களில், மக்களவையை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.பின்னர் தொடங்கிய மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டதால், மாநிலங்களவையையும் பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர். பின்னர் தொடங்கிய மாநிலங்களவையில் பழங்குடியினர் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச முயன்றார். அப்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு