கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் செய்தி
பெருகிவரும் இணையதள மோசடிகளில் புதிதாக QR Code Scholarship Scam எனும் மோசடி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
மோசடி நடைபெறும் விதம்
செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசும் அடையாளம் தெரியாத நபர் உங்களுடைய பெயர் விபரங்களை கூறி உங்கள் மகன் அல்லது மகளுக்கு scholarship வந்துள்ளது என்றும் அதை பெற்றுக்கொள்ள நாங்கள் அனுப்பும் QR Code scan QR Code whatsapp அனுப்பி கொடுப்பார். அதை உண்மை என நம்பி அந்த QR Code ஐ Gpay, Phonepe போன்ற UPI செயலிகள் மூலம் scan செய்து UPI PIN விபரத்தை கொடுத்த உடன்… நம்முடைய வங்கிக்கணக்கில் உள்ள பணம் அந்த மோசடி செய்யும் நபர் வைத்திருக்கும் வங்கிக்கணக்கிற்கு சென்றுவிடுகிறது.
எனவே மேற்கண்ட மோசடி பற்றி பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், இதுபோன்ற மோசடி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யுமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.