சென்னை: சென்னை தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா நேற்றுஅளித்த பேட்டி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும். விரிவான அறிக்கையை தர வேண்டும். நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கி இருப்பதற்கு பாஜ தான் காரணம். மணிப்பூர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. மணிப்பூர் பிரச்னைக்கு காரணம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது தான் பாஜவின் செயலாக உள்ளது. மணிப்பூர் முதல்வர் சூழலை எதிர்கொள்ள திராணி இல்லாதவராக உள்ளார். எனவே, அவரே பதவி விலக வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 10 கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளது. மணிப்பூரில் நடக்கும் கலவரத்திற்கு முழு பொறுப்பையும் மோடியும், பாஜகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென்றால் பாஜ பிடியில் இருந்து இந்தியா மீட்கப்பட வேண்டும். பாஜவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு