கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை(பீமா கிராம் திட்டம்) அஞ்சல்துறை செயல்படுத்தி வருகிறது. அடையாளம் காணப்படும் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 100 வீடுகளை இதில் இணைக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதுவரை நாடு முழுவதும் 46,739 கிராமங்கள் அஞ்சல் துறையின் கிராம ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட நன்மைகள் குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள், வானொலி மூலம் குறும் பாடல்கள், நாடு முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்டவை மூலம் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது.தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாடு இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு