சென்னை:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடைபெற்ற வழக்கு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்தது.இதையடுத்து அவர் உடனடியாக அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பிற கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறினர்.எடப்பாடி பழனிசாமியை, அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்துவருகின்றனர்.
இந்தநிலையில், அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமைவில் சென்னையில் வரும் 7-ஆம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதுவும் ரத்தாகியுள்ளது. அடுத்தடுத்து நிர்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படுவதால் அதிமுக தொண்டர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு