ஆசியா கோப்பை 2023 : இந்தியா பாகிஸ்தான் போட்டியில் மழை !

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரிசர்வ் டேயான இன்றைய போட்டியிலும் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியானது நேற்று கொழும்புவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஷாஹீன் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலமாக ஒருநாள் போட்டியில் ஷஹீனுக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றார்.

சுப்மன் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் நழுவவிட அவர், 37 பந்துகளில் 10 பவுண்டரி அடித்த சுப்மன் கில் தனது 7ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஷாஹீன் அஃப்டி ஓவரில் மட்டும் 6 பவுண்டரி அடித்துள்ளார். சுப்மன் கில் அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 50ஆவது அரைசதத்தை முடித்தார். 240 இன்னிங்ஸில் விளையாடி ரோகித் சர்மா 50 அரைசதமும், 30 சதமும் அடித்துள்ளார். இதில், தொடக்க வீரராக ரோகித் சர்மா 159 இன்னிங்ஸ் விளையாடி 28 சதமும், 37 அரைசதமும் அடித்துள்ளார். ஷதாப் கான் வீசிய ஓவரில் 6, 6, 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சிக்ஸர் விளாசியுள்ளார். 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.

அவர், இந்தப் போட்டியில் 78 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். ஆனால், அவர் 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து 22 ரன்களில் 10000 ரன்கள் எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார். சுப்மன் கில் 52 பந்துகளில் 10 பவுண்டரி உடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். தற்போது வரையில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த நிலையில் தான் சிறிது நேரத்திற்கு முன்பாக வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென்று காற்றுடன் கனமழை பெய்த நிலையில் போட்டியானது நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு மழை நின்றதால், மைதானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனிடையே நடுவர்கள் மைதானத்தை பார்வையிட்டனர். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை என்று பார்வையிட்டனர். இதையடுத்து இரவு 9 மணிக்கு போட்டி தொடங்கினால் 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கும் என்று சொல்லப்பட்டது.

எனினும், 8.45 மணிக்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக போட்டியானது ரிசர்வ் டே என்று சொல்லப்படும் இன்று ஒத்தி வைக்கப்படுவதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மீண்டும் நின்ற இடத்திலிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தான் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி இன்று நடக்கிறது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 4ஆவது போட்டி நாளை நடக்க உள்ளது. இப்படி அடுத்தடுத்த நாட்களில் போட்டிகள் நடத்தப்பட்டால் இது இந்திய அணிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். வீரர்கள் தொடர்ந்து விளையாடி வந்தால் அவர்கள் சோர்வடையும் நிலை ஏற்படும். இது கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டி போன்று மாறிவிடும். நேற்றும் விளையாடி, இன்றும் விளையாடி, நாளையும் இந்திய வீரர்கள் விளையாட இருக்கின்றனர்.

தற்போது இன்றைய போட்டியிலும் மழை பெய்து வருவதால், போட்டி தொடங்குவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டால், அடுத்து நடைபெறும் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதே நேரம் இலங்கை பாகிஸ்தானை வீழ்த்தினால் அந்த அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இன்றைய போட்டியில் ரிசர்வ் டே அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டால் சந்தேகம் தான். இனி வரும் நாட்களில் அடுத்தடுத்த போட்டிகள் நடக்க இருக்கிறது. இன்றும் மழை பெய்ததால் போட்டி பாதிகப்பட்டால் 13 ஆம் தேதி போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது அடிக்கடி மழை பெய்தால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டியானது நடக்கவும் சாத்தியமுள்ளது.

அப்படி 13 ஆம் தேதி போட்டியானது மாற்றப்பட்டால்,

செப்டம்பர் 11 – இந்தியா – பாகிஸ்தான்
செப்டம்பர் 12 – இந்தியா – இலங்கை
செப்டம்பர் 13 – இந்தியா – பாகிஸ்தா (மழையால் போட்டி மாற்றப்பட்டால் மட்டுமே)
செப்டம்பர் 14 – பாகிஸ்தான் – இலங்கை
செப்டம்பர் 15 – இந்தியா – வங்கதேசம்
செப்டம்பர் 17 – ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய