திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 25 ‘அருளுடைமை’ (தொடர்பு கருதாமல் எல்லாரிடத்திலும் இரக்கம் காட்டுதல்)
குறள் 246:“பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்”
பொருள்:உயிற்களிடது அருள் செய்யாமல் அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து வருபவர் உறுதிப் பொருளாகிய அறத்திலிருந்து நீங்கி தம் கடமையை மறந்தவர் என்பர் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் மாற்கு 16:15ல் “பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” என்றும், எண்ணாகமம் 22: 32ல்”கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.” என்றும் திருக்குறளும்திருமறையும் அருளுடைமை எனும் இரக்க குணத்தை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமிu திருக்குறள் உண்மை உரை பேரவை.