திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 28 ‘கூடா ஒழக்கம்’ (துறவரத்திற்கு ஒவ்வாத தீய ஒழுக்கம் அதாவது மறைவாக சிற்றின்பம் நுகர்தல்)
குறள் 280: “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்”
பொருள்: உள்ளத்தில் உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாதென்று தள்ளிய கூடா ஒழுக்கத்தை விட்டுவிட்டால் மொட்டையடித்தலும், சடைவளர்த்தலுமாகிய வெளிவேடம் வேண்டிய தில்லை
எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் மத்தேயு 23:14ல் “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.” என்றும், ஏசாயா
58:5ல் “மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?” என்றும், அப்போஸ்தலர் 18:18ல் “பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.” என்றும் திருக்குறளும் திருமறையும் துறவறத்திற்கு ஒவ்வாத கூடா ஒழக்கத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை