திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 29 ‘ கள்ளாமை (பிறர் பொருளை அவரை வஞ்சித்து மறைவாக கவர நினையாமை)
குறள் 282: “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்”
பொருள்:, தீவினைகளைத் தம் உள்ளத்தால் நினைப்பது குற்றமாகும். ஆகையால் பிறன்பொருளை அவன் அறியாமல் கவர்ந்து கொள்வோம் என்று எண்ணக்கூடாது
எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் உபாகமம் 5:21ல் “பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.” என்றும் திருக்குறளும் திருமறையும் கள்ளாமை எனும் வஞ்சகத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை