திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 29 ‘ கள்ளாமை (பிறர் பொருளை அவரை வஞ்சித்து மறைவாக கவர நினையாமை)
குறள் 287: “களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்”
பொருள்: அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பினவரிடம் களவு என்று சொல்லப்படும் இருண்ட அறிவு இல்லை
எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் சங்கீதம் 37: 37இல் “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.” என்றும்,
1தெசலோனிக்கேயர்5:5இல் “நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இயேசுவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.” என்றும் திருக்குறளும் திருமறையும் கள்ளாமை எனும் வஞ்சகத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை