திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 29 ‘ கள்ளாமை (பிறர் பொருளை அவரை வஞ்சித்து மறைவாக கவர நினையாமை)
குறள் 289: “அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்”
பொருள்: களவு அல்லாத நல்லவற்றை அறியாதவர், வரம்பு கடந்த செயல்களைச் செய்து அப்பொழுதே அழிவர்
எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் நீதிமொழிகள் 10:9 இல் “உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.” என்றும், நீதிமொழிகள் 29:1 இல் “அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.” என்றும், 1 திமோத்தேயு 5:24 இல் “சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.” என்றும் திருக்குறளும் திருமறையும் கள்ளாமை எனும் வஞ்சகத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை