சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவின்படி பணி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை அரசாணை எண் 64ன்படி நியமனம் செய்ய வேண்டும். அரசாணை எண் 17ஐ ரத்து செய்ய வேண்டும். மே மாத சம்பளம் வழங்க வேண்டும். ரேன்டமிஷேசன் நீக்கி பழைய நிலையில் ஒன்றியத்தில் பணி வழங்க வேண்டும். அறிக்கை செலவின தொகை வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள பயணப்படி தொகையை வழங்க வேண்டும். வழஙகப்படாமல் உள்ள ஆறு ஆண்டு சம்பள உயர்வு வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க ஊழியர்கள் சார்பில் சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே ஜூலை 5ம் தேதி ஒரு நாள் கவன ஈர்ப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு