தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் இன்று சென்னை கண்ணகி நகர் முதல் தலைமுறை கற்றல் மையத்தில் சிறப்பு மருத்துவமுகாம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டபயனாளிகள் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் தென்சென்னை நடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலராளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும திட்டஇயக்குனர் ஷில்பா பிரபாகர், சென்னை மாநகராட்சி 15வது மண்டல குப தலைவர் மதியழகன், நிலைக்குழு தலைவர் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, நகர நல அலுவலர் மரு.ஜெகதீசன் மற்றும்உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு