அன்பார்ந்த தோழர்களே!
இனிய காலை வணக்கம், தமிழகத்தில் பட்டியலின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான நில மீட்பு தொடர் போராட்டங்களை தலித் விடுதலை இயக்கம் முன்னெடுத்து வருவதினை தாங்கள் அறிந்ததே.
இந்நிலையில், வருகின்ற 12.02.2025 புதன்கிழமை காலை சென்னை நில நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பாக பல்வேறு சனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பில் பஞ்சமி நிலம், நில உச்சவரம்பு நிலம், பூமிதான நிலம், மானிய நிலங்கள் மற்றும் நிபந்தனை ஒப்படைப்பு நிலங்கள் குறிப்பாக கோயில் நிலங்கள் மடாதிபதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களும் மீட்கப்பட்டு நிலமில்லாத பட்டியலின மக்களுக்கு வழங்கிடக்கோரி “காத்திருப்பு போராட்டம்” நடைபெறுகிறது.
இந்நிகழ்வில், தங்களின் அமைப்பு சார்பாகவும், தங்களின் நண்பர்களோடு போராட்டத்தில் திரளாக பங்கேற்பதோடு, முடிந்தளவு தங்களின் சார்பாக போராட்ட செலவினங்களுக்காக பொருளாதார உதவியும் வழங்கிடுமாறு தங்களை மிகவும் அன்போடு வேண்டுகிறோம்.நன்றி!
தோழமையுடன்,
ச.கருப்பையா,
மாநிலத் தலைவர்,
தலித் விடுதலை இயக்கம்.