முதல் முறையாக மடிக்கும் வகையிலான பிக்சல் ஃபோனை, கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டென்சார் வகை சிப்செட் உடன் 256 அல்லது 512 ஜிபி சேமிப்பு வசதி இந்த போனில் இடம்பிடித்துள்ளது.
120 hertz ரெஃப்ரஷ் ரேட் இந்த போனில் உள்ளது. 48 மெகாபிக்சல் wide camera மற்றும் 9.5 மெகாபிக்சல் இரட்டை முன்பக்க செல்ஃபி கேமிராக்கள் இந்த போனின்சிறப்பம்சமாகும். 4,821 எம்ஏ எச் பேட்டரி இருப்பதால் இந்த போன் ஒரு நாள் முழுக்க தாக்கு பிடிப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
1,799 டாலராக இந்த போனின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஜெர்மனியில் மட்டுமே இந்த போன் தற்போது சந்தையில் அறிமுகமாகியுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.