லண்டன் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் இடையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலியை சந்தித்துள்ளார் நடிகை ராதிகா. அவருடன் இணைந்து செல்பியும் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக விளையாடி வருபவர் விராட் கோலி. இந்திய அணிக்கு கேப்டனாக செயலாற்றிய இவர் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆடி வருகிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தி இருக்கிறார் கோலி.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியுடன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ராதிகா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு தனியாகவோ தன்னுடைய குடும்பத்தினருடனோ பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது லண்டன் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் இடையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலியை சந்தித்துள்ளார். அவருடன் இணைந்து செல்பியும் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை ராதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் இருப்பவர் விராட் கோலி. அவரது விளையாட்டு திறமையினால் நம்மைப் பெருமைப்பட வைத்தவர். லண்டனில் இருந்து சென்னை திரும்பும்போது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவருடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி. செல்பிக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.