2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தமது முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. 2022ம் ஆண்டு 2வது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்தநிலையில் கடந்த 20ம் தேதி 2023-24ம் ஆண்டுக்கான 3வது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து மறுநாள் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இரு பட்ஜெட் தாக்கலுக்கான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் தொடர் நாளை மறுநாள் 28 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.முன்னதாக நாளை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி பேசுகிறார். மறுநாள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர்பி. தியாகராஜன் பதிலுரை அளிக்கிறார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு