மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. சாமிநாதன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு.சேகர்பாபு, தகைசால் தமிழர் – அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆகியோரோடு பங்கேற்றேன். இந்தியத் தொல்லியல் அகழாய்வின் ஆதவனாக, திராவிடப் பண்பாட்டை உலகறியச் செய்த ஜான் மார்ஷல் அவர்களின் சிலைக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டியும், ‘சிந்துவெளி வரிவடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவாளியல் ஆய்வு” என்ற நூலையும் வெளியிட்டார். சிந்துவெளி எழுத்துமுறை முழுவதையும் அறிந்துகொள்ள வழிகோலும் தொல்லியல் ஆய்வு நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்றும், தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் பெயரில் ஆய்விருக்கை அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், தமிழ்ப்பண்பாட்டின் தொன்மையை உலகறியச் செய்ய அளப்பறியப் பங்காற்றும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள், கல்வெட்டியல் ஆய்வாளர்கள் மற்றும் நாணயவியல் வல்லுநர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருவருக்கு விருது வழங்கப்படும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளது விழாவின் முத்தான முத்தாய்ப்பு அறிவிப்புகள் ஆகும்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு